நான் மனதில் நினைப்பவைகள் எல்லாம் எனக்கே தெரியாமல் போகலாம், அந்த ரங்கனுக்கு தெரியாமல் போகுமா என்ன?
சில நாட்களாக....இல்லை...இல்லை....பல நாட்களாக என் மனதில் ஒரு விஷயம் ஒடிக் கொண்டிருந்தது. " ஸ்வாமி ராமானுஜர்" என்றால் உடல் உருகி, உள்ளம் குளிர்கிறது. அதே உடல் உருகலோ, உள்ளம் குளிர்தலோ "ஸ்வாமி மணவாள மாமுனி" என்று சொல்லும் போது ஏற்படுவதில்லை. உபதேசரத்தினமாலையும், யதிராஜ விம்சதியும் சேவித்தாலும், ஸ்வாமி ராமானுஜர் மேல் இருக்கும் ஈடுபாடு ஸ்வாமி மணவாள மாமுனியின் மேல் இல்லை. என்ன காரணம் என்று தெரியவில்லையே....ஸ்வாமி மணவாள மாமுனியின் மேல் ஈடுபாடு வருமா இல்லையா? தெரியவலில்லையே.....மனதின் ஓட்டத்தை அந்த ரங்கன் கண்டு கொண்டான். திடீரென்று, காரணமே இல்லாமல் ஒருவர் என்னிடம் "திருவாய்மொழி நூற்றந்தாதி" கற்றுக் கொள்ளேன் என்று சொல்ல....திருவாய்மொழி நூற்றந்தாதி பற்றி ஏதும் அறியாத நான், அதை கற்றுக் கொள்ள தயாரானேன். முதல் நாள் இரவு ஃபோனில் சந்தை upload பண்ணியாகி விட்டது... மறு நாள் துவங்குவோம் என்று முடிவு எடுத்தால்......நான்கு நாட்கள் சந்தை சொல்ல முடியாதபடி ஒரு துக்கம்..... அது முடிந்து துவங்குவோம் என்று நினைத்தால்.....அந்த "மூன்று" நாட்கள்....சுறு சுறு என்று கோவம்....அந்த ரங்கன் மேல் தான்..."ஏதோ கத்துக்கலாம்னு நினைக்கும் போது ஏன் தடங்கல் பண்ற....இனி நான் திருவாய்மொழி நூற்றந்தாதி கத்து முடிக்கற வரைக்கும் எந்த தடங்கலும்...அந்த "மூன்று" நாட்கள் தவிர எந்த தடங்கலும் தரக்கூடாது. நானும் அந்த நாட்கள டார்கெட்டா வச்சிண்டு மாசா மாசம் இருவத்துஞ்சு பாட்டு கத்துண்டு நாலு மாசத்துல முடிச்சுடறேன். உனக்கும் எனக்கும் டீல்........" போட்ட டீலின் படி அதன் பிறகு ஒரு தடங்கலும் வரவில்லை என்றாலும்...ஒரு மாதத்திற்குள் இருபத்தி ஐந்து பாசுரங்கள் கற்றுக் கொள்வது
எனக்கு கடினமாய் தான் இருந்தது. வேறு எங்கேயும் கவனம் செலுத்தாமல்....சந்தை கற்றுக் கொள்வதே குறியாகி விட்டது . சமையல் செய்யும் போது, பாத்திரங்கள் தேய்க்கும் போது, துணிகள் மடித்துக் கொண்டிருக்கும் போது....கிடைத்த நேரத்தில் எல்லாம் சந்தை கேட்பது வாடிக்கையாய் போனது. வேறு நேரங்களில் அந்த பாசுரங்கள் மனதில் வந்து வந்து சென்று கொண்டிருந்தது. பாசுரங்கள் மட்டுமா வந்தன....அதை பாடிய ஸ்வாமி மணவாள மாமுனிகளும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டார் என்னிடம் சொல்லாமல், எனக்கும் தெரியாமல். அவர் என் உள் புகுந்ததை, ஒரு நாள் காலை பெருமாள் சேவிக்கும் போது என்னையும் அறியாமல் "மணவாள மாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்" என்று கைகூப்பிய நிமிடத்தில் உணர்ந்து கொண்டேன். உணர்ந்த நேரத்தில் உடலும் உள்ளமும் சிலிர்த்தது உண்மை...அந்த சிலிர்ப்பு இன்று வரை தொடர்வதும் உண்மை....அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.
ஒரு மாதம் முன்பு எழுத்தாளர் திரு. பாலகுமாரன் அவர்கள் திருமுக்கூடலில் அவருக்கு ஏற்பட்ட பரவச அனுபவத்தைப் பற்றி எழுதியிருந்தார்.
படித்து முடித்த பின் பிரமித்துப் போனேன். எப்பேர்ப்பட்ட அனுபவம் அது....மீண்டும் மீண்டும் படித்து, பிரமித்து, வியந்து.....கடைசியில் தன்னிரக்கத்தால் புலம்பும் நிலைக்கு தள்ளப் பட்டேன். "பெருமாளே...உனக்கு ரொம்ப ஒர வஞ்சனை. எவ்ளோ கோவிலுக்கு நானும் வந்திருக்கேன். இந்த மாதிரி ஒரு அனுபவத்தை குடுத்துருக்கயா.....பாலகுமாரன் பெரிய ரைட்டர். அவருக்கு இந்த மாதிரி அனுபவம் குடுத்தா, அவர் நன்னா எழுதி உன் பெருமைய உலகுக்கு எல்லாம் சொல்லுவார். அதனால தான குடுத்த...." இன்னும் ஏதேதோ பச்சாதப புலம்பல். பின் அந்த புலம்பல் மறந்து போனது. திருவாய்மொழி நூற்றந்தாதி முழுவதும் கற்று முடித்த அன்று...."பெருமாளே, போட்ட டீல் படி எனக்கு வேற ஒண்ணும் தடங்கல் குடுக்கல. நானும் கத்து முடிச்சுண்டேன். ரொம்ப தேங்க்ஸ்..." என்று கைகூப்பிய போது ஒன்றும் தெரியவில்லை. கீழே விழுந்து சேவிக்கும் போது...என் முன்னே உயரமாய் ஸ்வாமி ராமானுஜர் நிற்க...நான் அவரை சேவிப்பது போல் ஒரு தோற்றம். உடம்பு என்னவோ செய்தது. இது என் பிரமையாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் அந்த உணர்வு....திரு. பாலகுமாரன் அவர்களுக்கு ஏற்பட்டது போல்.....அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.
சரி, திருவாய்மொழி நூற்றந்தாதி கற்றுக் கொண்டாகிவிட்டது. இந்த பாசுரங்களுக்கு எனக்கு அர்த்தம் தெரிய வேண்டாமா... அந்த நினைப்பு காற்றோடு கலந்து போய்விட்டது. அர்த்தங்களை தெரிந்து கொள்ள நான் ஏதும் பிரயத்தனம் படவில்லை. இப்படி இருக்கையில் googleலில் நான் எதோ தேடிக் கொண்டிருக்கையில் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி அவர்களின் திருவாய்மொழி நூற்றந்தாதி உபன்யாஸம் கிடைத்தது. அட....என்று வியந்து போய் அதை கேட்டு முடித்த அடுத்த நாள்....வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி ஶ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உபன்யாசத்தில் திருவாய்மொழி நூற்றந்தாதியிலிருந்து சில பாசுரங்களை எடுத்துக் கொண்டு அழகாய் உபன்யசித்தார்.... என் பிரயத்தனம் ஏதுமின்றி எனக்கு அர்த்தம் வந்த சேர்ந்தது...
.அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.
மகாகவி பாரதியாரின் "வருவாய் வருவாய் கண்ணா" பாடலில், "கருவாய் என்னுள் வளர்வாய் கண்ணா..." என்ற ஒரு வரி வரும். யாருக்கு தான் கண்ணனை கருவில் சுமக்கும் ஆசை இருக்காது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. திருவாய்மொழி நூற்றந்தாதி கற்றுக் கொண்ட நான்கு மாதத்தில் அந்த ஆசை மாறிவிட்டது. அந்த நான்கு மாதங்களும் வெளி உலகத்தார் தொடர்பு அதிகம் இல்லாமல், பாசுரத்தின் உள்ளும் பெருமாளின் கண் பார்வையில் இருந்தேன். யார் என்ன சொன்னால் நமக்கு என்ன, யார் எப்படி போனால் நமக்கு என்ன..... நம் வேலை பாசுரங்களைக் கற்றுக் கொள்வது என்று ஒரே நோக்கில் இருந்தேன். யாரிடமும் வாலாட்டவும் இல்லை, வாய் கொடுத்து மாட்டிக் கொள்ளவும் இல்லை......நிம்மதியாய், அமைதியாய், அழகாய் இருந்தது அந்த இடம். கற்று முடித்த பின் வெளியே வந்தால்...நன்றாய் தான் இருந்தது.....ஒன்றும் குறையில்லை....ஆனாலும் ருசி கண்ட பூனை போல் மீண்டும் பாசுரங்களுக்கு உள்ளேயும், பெருமாளின் பார்வையிலும் இருக்க ஆசை. கருவாய் கண்ணனை சுமந்தால் அவனை நான் பார்த்துக் கொள்ள வேண்டும் . அது எனக்கு தேவையில்லை. அவன் பார்வையில், அவன் பக்கலில் நான் இருக்க வேண்டும். அதற்கு மீண்டும் நான் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்....ஆனால் என்ன கற்றுக் கொள்வது என்று தெரியவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த போது....ஸ்வாமி வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் உபன்யாசத்தில்..."உங்களுக்கு ஏதாவது கத்துக்கணும்னு ஆசை இருந்தா, திருமாலை கத்துக்கோங்கோ...நாற்பத்தி ஐந்தே பாட்டு தான்... ரொம்ப சுலபம்........." அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்.
கடைசியாக, திருவாய்மொழி நூற்றந்தாதியைப் பற்றி எழுதுகிறோம். ஸ்வாமி மணவாள மாமுனியின் அழகான புகைப்படம் கிடைதால் நன்றாய் இருக்கும் என்று நினைத்து முடிப்பதற்குள், புகைப்படம் வந்து சேர்ந்தது.

அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான்...
வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் உபன்யாசத்தை தற்செயலாய் கேட்டேன். தொடர்ந்து கேட்கும் ஆர்வம் வந்தௌ ஐந்து ஆண்டுகளுக்கு மேலாய் கேட்கிறேன். இன்று ஐடியேனுக்கும் நாலு பாசுரம் தெரிகிறது. ஆழ்வார்களின் தீந்தமிழ் சுவை புரிகிறது. நான் பெற்ற பாக்கியம்.
ReplyDelete